வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையில் போதைப் பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.

வெல்லம்பிடிய பகுதியில் வைத்து 25 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, குறித்த நபர் வெள்ளவத்தையில் வைத்து  ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து சுமார் 1.5 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றபட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.