இஸ்ரேலின் காசா எல்லைக்கு அருகே அஷ்கெலோன் மீது நடந்த ரொக்கெட் தாக்குதலில் ஒரு கேரள பெண் உயிரிழந்துள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கீரி தோடு பகுதியல் வசிக்கும் செளமியா சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலின் கடலோர கிராமமான அஷ்கெலோனில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.

இந் நிலையில் அஷ்கெலோனில் மேற்கொள்ளப்பட்ட ராக்கெட் தாக்குதல்களின் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை இந்திய மத்திய வெளியுறவு இராஜாங்க அமைச்சர் வி. முரளிதரன் மே 12 தொடக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளதுடன், இடுக்கியைச் சேர்ந்த கேரள காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர் ரோஷி அகஸ்டினும் உறுதிப்படுத்தியுள்ளார்.