இந்தியாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா தொற்றுக்கு இரையாகி பல பிரபலங்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட துணை நடிகர் மாறன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவர் தனது 48 வயதிலேயே காலமாகியுள்ளார். 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் நடித்து பிரபலமான இவர், இதனையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளமை குறிப்பிடதக்கது. 

 கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்த நிலையில், தற்போது நடிகர் மாறனும் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.