பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்களில், இருக்கையின் எண்ணிக்கைக்கமையவே பயணிகள் செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

வாடகை அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்களில் சாரதியுடன் பயணிகள் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.

அதனைவிட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள்,  சாரதிகள், சாரதி உதவியாளர்கள் மற்றும்  வாகன நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.