வவுனியா நகரில் முகக்கவசம் அணியாது பயணித்தவர்களுக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

வவுனியா, பழைய பஸ் நிலையம் முன்பாக இன்று (11.05) பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் முககவசம் அணியாது பயணித்தவர்கள், முககவசத்தை சீராக அணியாது பயணித்தவர்கள் ஆகியோரை வழிமறித்து அவர்களுக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகனைளயும் பதிவு செய்தனர்.

அத்துடன், பழைய பஸ் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பஸ்களையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டதுடன், பஸ்களில் முகவசத்தை சீராக அணியாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில்,  முகக்கவசத்தை அணியாமை மற்றும் முககவசத்தை சீராக அணியாமை என்பவை தொடர்பில் 28 பேருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.