சமீப காலமாக தமிழ் சினிமாவில் முக்கிய பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரணித்து வருகின்றமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாக உள்ளது.

இந்நிலையில், இன்று நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

1985ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜன் இயக்கிய ஆண் பாவம் மூலம் தமிழ் திரை உலகத்தில் அறிமுகமானவர் நெல்லை சிவா. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். 

வைகை புயல் வடிவேலுவுடன் பல்வேறு நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்துள்ள நெல்லை சிவா “கிணத்த காணோம்“ எனும் நகைச்சுவைக் காட்சியின் மூலம் பிரபலமடைந்தார். 

இந்நிலையில் நெல்லையில் வசித்துவந்த இவர் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை(11.05.2021) உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.