நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள் குறித்தும் முக்கிய விடயமொன்றை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று (11.05.2021) தொடக்கம் தினமும் மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், மதுபான தவரணைகள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.