சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இலங்கை இராணுவத்தின் மூலம் குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய கொழும்பின் பல்வேறு இடங்களிலும் இராணுவ வைத்தியர்கள்,  தாதியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.