(எம்.ஆர்.எம்.வசீம்)
புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை புதன்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட வானிலை அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக  சுகாதார வழிகாட்டலுக்கமைய வரையறுக்கப்பட்ட எண்ணிகையிலானவர்களே இதில் கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே தலைப்பிறை சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு  0112 432110, 0112451245,  ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.