இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்றையதினம்  செவ்வாய்கிழமை (11.05.2021) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 106,641 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 128,530 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 827  பேர் உயிரிழந்துள்ளனர்.