மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் கட்டுப்படுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்று நேற்று (10) திங்கட்கிழமை மதியம் கண்டு பிடிக்கப்பட்டதோடு, சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொது அமைப்புக்கள், கிரம அலுவலகர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று திங்கட்கிழமை (10) மதியம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது மடு பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் கட்டுப்பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் சட்டவிரேதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, கசிப்பு வடிக்க பயண்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மற்றும் 14 லீற்றர் கசிப்பு போன்றவற்றை மீட்டனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தில், தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.