நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து நகரங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் மந்த நிலையேற்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது.  

இந்நிலையில், மாகாணங்களுக்கிடையிலான பயணக்காட்டுப்பாடுகளும் இன்றிலிருந்து அமுலுக்கு வருகின்றன.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடங்களில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படுவதையும் கொழும்பில் வாகன போக்குவரத்து மந்தமடைந்திருப்பதையும் இன்று செவ்வாய்க்கிழமை அவதானிக்க முடிந்தது.

படப்பிடிப்பு : தினெத் சமல்க