2020 இல் புதிய அரசாங்கம் அமைக்க திட்டம்

Published By: MD.Lucias

23 Aug, 2016 | 08:57 AM
image

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே  2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும் உரையும் இன்று பல விமர்சனங்களுக்கு உள்ளானவண்ணமுள்ளன. தற்போது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்ற மறுப்பவர்களையும் நீக்கிவிட்டு கட்சிக்கான அறும் பாடுபட்டவர்வகளை கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.

ஆனால்  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவ்வாறு இல்லை. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சிலரை உடைத்தெடுத்து  சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலரின் அமைப்பாளர் பதவிகளை புதிதாக வந்த ஐக்கிய தேசிய கட்சியினருக்கு   பறித்துகொடுத்தனர்.

இவ்வாறிருந்தும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நாங்கள் சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதாக கூறுகின்றனர். அவர்களி்ல்  7 பேர் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்து தொடர்பில் கந்துரையாடியுள்ளனர்.

அதேபோல் கடந்த காலங்களில் மஹிந்தவின் குடும்ப ஆட்சியை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பூரண சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் அவ்வாறான நிலைமை இன்று இல்லை.   2020 ஆண்டில் ஐக்கிய மக்கள சுதந்ததிர கூட்மைப்பு அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என்ற எதிர்பார்ப்பில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்வதில் சவால்கள் பலவற்றை எதிர்கொள்கிறோம்.  ஐக்கிய  தேசிய கட்சிக்கும் அவ்வாறான சவால்கள் இருக்ககூடும்.  இருப்பினும் எமது இலக்குகளை நோக்கி சிறந்த முறையில் எமது பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

  11 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி குருணாகலில் கட்சியின் 65 ஆவது ஆணா்டு பூத்தி நிகழ்வினை முன்னெடுப்போம் என்றார்.  

மேல்மாகாண அமைச்சர் காமினி திலகசிறி   குறிப்பிடுகையில் 

புதிய அமைப்பாளர் நியமனங்கள் குறித்து  பல விமர்சனங்கள் எழுந்தன.  இவ்வாறான அமைப்பாளர் நீக்கங்களும் நியமனங்களும் புதியதல்ல. மஹந்தவின் காலத்திலும் இதுபோன்று 17 அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அதன் போது நான் உட்பட ஸ்ரீ சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எமது கட்சிக்கு வந்த பந்துல, காமினி லொகுகே உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 17 பேர் அவ்விடத்திற்கு நியமிக்கப்பட்டனர்.

அந்த சமயத்தில் எனது இருந்த இரண்டு பதவிகளையும் மஹிந்த பறித்துக்கொண்டார். அவ்வாறு பாதிகப்பட்டவர்களுக்கு இன்று பதவி வழங்கப்படுகின்றது. கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் தீர்மானங்களை ஏற்காதவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் விமர்சனங்களுக்குரிய காரணங்கள் எதுவும் இல்லை.

அத்துடன் தனது பதவியை  இராஜினாமா செய்துள்ள பந்துலவும் ஹோமாகமை தொகுதியில் எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளபடவில்லை என உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 170 மில்லின் ரூபாய் செலவிலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனால் எதிரணியின் விமர்சனங்கள் அடித்தளமற்றது. அமைப்பாளர்கள் நீக்கமானது ஜனாதிபதியின் ஒன்றறை வருட பொறுமையின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04