வட்ஸ்அப் நிறுவனம் தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையில் (Privacy Policy) மாற்றம் செய்வதாக கடந்த ஜனவரியில் அறிவித்தது.

பயனாளர்களின் தகவல்களை தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளவே இந்த ஏற்பாடு என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பயனாளர்கள் புதிய விதிகளை ஏற்பதற்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

பின்னர் மே 15 வரை அது நீட்டிக்கப்பட்டது. அந்த திகதிக்குப் பிறகும் ‘அப்டேட்’களை ஏற்காதவர்களின் கணக்கு நீக்கப்படாது, ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல்கள் அனுப்பப்படும் என கடந்த வாரம் வட்ஸ்அப் அறிவித்தது.

இந்நிலையில், வட்ஸ்அப் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், தொடர்ந்த நினைவூட்டல்களுக்குப் பின்னும் பயனாளர் புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால், ஒரு கட்டத்தில் அவரால் சாட் லிஸ்டை (chat list) பயன்படுத்த முடியாது.

அதேநேரம், அழைப்புகள், வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். ‘நோட்டிபிகேஷன்ஸ் எனேபில்டு’ ஆகியிருந்தால், தகவல்களை படிக்க, பதிலளிக்க முடியும். மிஸ்ட் கோல் அல்லது வீடியோ அழைப்புக்கு திருப்பி பதிலளிக்க முடியும்.

அதன்பிறகு சில வார கால அவகாசத்துக்குப் பின்பும் பயனாளர் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டால், அவருக்கு அழைப்புகள், நோட்டிபிகேஷன்கள் வராது. அவற்றை குறிப்பிட்ட பயனாளரின் செல்போனுக்கு அனுப்புவதை வட்ஸ்அப் நிறுவனம் நிறுத்திவிடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 32  மில்லியன் பேர் வட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.