கொவிட்-19 பரவலை தடுக்கும் முயற்சியாக இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து பயணிகளின் வருகைக்கு குவைத் தடைவிதித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டுக்குள் நுழைவதை மறு அறிவித்தல் வரை தடை செய்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த முடிவு பொருட்கள் விமான சேவைகளுக்கு பொருந்தாது.

நான்கு நாடுகளிலிருந்து குவைத்துக்குள் நுழைய, பயணிகள் குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே பிறிதொரு நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று குவைத் அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி வழங்கப்படாத குடிமக்கள் மே 22 முதல் வெளிநாடுகளுக்கு செல்வதை தடை செய்வதாக கடந்த வாரம் குவைத் அறிவித்திருந்தது.