அமெரிக்காவின் Leapset நிறுவனம் தனது பெயரை CAKE என மாற்றியுள்ளதைத் தொடர்ந்து, சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த பொறியியல் நிறுவனத்தின் இலங்கைக் காரியாலயம் Leapset என்ஜினியரிங் CKAE LABS என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக CAKE LABS திகழ்கிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் மூலம், மிகவும் குறுகிய காலப்பகுதியில் இலங்கையின் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம், சிலிக்கன் வெலி உடன் நெருக்கமான உறவை மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும். மேலும் புத்தாக்கம் மற்றும் புரட்சி ஆகியவற்றை இலங்கைக்கு கொண்டு வரக்கூடியதாகவும் இருக்கும்.

இந்த செயற்பாடுகள் தொடர்பில் CAKE LABS இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பொறியியல் பிரிவின் சிரேஷ்ட பதில் தலைவருமான ஷனில் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில் “Leapset" என்ஜினியரிங் என்பதை CAKE LABS என பெயர் மாற்றம் செய்ய வாய்ப்பு கிடைத்தமையானது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படியாக அமைந்துள்ளது. எமது தாய் நிறுவனத்தைப் போலவே, எம்மையும் பெயர் மாற்றிக் கொள்வது என்பது மட்டுமல்லாமல், சிலிக்கன் வெலி பாணியை பின்பற்றும் இலங்கை நிறுவனமாக திகழச் செய்யும். எமது பொறியியல் செயற்பாடுகளில், Facebook, Apple மற்றும் Google போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் முன்னணி தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துவதுடன், உணவகங்கள் துறைக்கு பொருத்தமான புரட்சிகரமான தீர்வுகளை நாம் தயாரித்து வருகிறோம்” என்றார்.

CAKE LABS என்பது CAKE கோர்பரேஷனின் அங்கத்துவ நிறுவனம் என்பதுடன், உணவகத் தொழில்நுட்ப கட்டமைப்பொன்றை தற்போது தயாரித்த வண்ணமுள்ளது. உணவகத் தொழிற்துறையின் பாரிய நிறுவனமான SYSCO (NYSE: SYY) இன் அங்கத்துவ நிறுவனமாகவும் CAKE கோர்பரேஷன் அமைந்துள்ளது.

CAKE இன் கட்டமைப்புகள் மூலமாக தேசிய மட்டத்தில் கிடைக்கும் ஒன்றிணைக்கப்பட்ட தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை உணவகத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், விற்பனை நிறுவனம் – வாடிக்கையாளர் உறவை மேம்படுத்துவதாகவும் உள்ளது. CAKE இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மாணி குலசூரிய கருத்து தெரிவிக்கையில், “வாழ்க்கையை மாற்றும் சக்தியை தொழில்நுட்பம் கொண்டுள்ளதுடன், வெவ்வேறு தொழிற்துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. இது போன்றதொரு தொழில்நுட்பத்தையே நாம் கட்டியெழுப்பியுள்ளோம். இதை எய்துவதற்கு விற்பனை நிலையங்கள் – வாடிக்கையாளர்கள் உறவுகள் காணப்படும். நாம் தொடுகை நிலையங்களை அவதானித்து வருகிறோம். நீங்கள் உணவகமொன்றை எவ்வாறு இனங்காண்பீர்கள்? எவ்வாறு முற்பதிவொன்றை மேற்கொள்வீர்கள்-? எவ்வாறு கொடுப்பனவை மேற்கொள்வீர்கள்? எதன் காரணமாக நீங்கள் மீண்டும் வருவீர்கள்? இந்த செயன்முறையை இலகுவாக்குவதுடன், அதன் முக்கிய உள்ளங்கமாக இருப்பது எமது நோக்காக அமைந்துள்ளது” என்றார்

CAKE இன் கட்டமைப்பு ஏற்கனவே, $1 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கொடுக்கல் வாங்கல்களை Point of Sale கட்டமைப்பினூடாக மேற்கொண்டுள்ளது. தனது விருந்தினர் முகாமையாளர் முற்பதிவு கட்டமைப்பின் மூலமாக 45 மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்களை உணவகங்களில் அமரச் செய்துள்ளது.

இந்த கட்டமைப்புக்கு வலுச்சேர்த்து மேலும் விஸ்தரிக்கச் செய்வதற்கு, உலகத் தரம் வாய்ந்த பொறியியல் திறமைகளை CAKE LABS இலங்கைக்கு கவர்ந்த வண்ணமுள்ளது. இதன் பெறுபேறுகள் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், “சிலிக்கன் வெலி” புத்தாக்குநராக திகழ்வது என்பதில் உறுதியான கவனத்தை செலுத்தும் வகையில் இதன் நோக்கத்தை தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கும். சிலிக்கன் வெலியில் பொறியியலாளர்கள், தாம் பயன்படுத்தும் Code அல்லது அவர்கள் பயன்படுத்தும் கட்டமைப்புக்கமைய பணிபுரியும் நிறுவனங்களை தெரிவு செய்யமாட்டார்கள். உலகை மாற்றும் நிறுவனங்களை அவர்கள் தெரிவு செய்கின்றனர். பொறியியலாளர்களுக்கு இலங்கையில் இந்த அனுபவத்தை வழங்கும் ஒரே நிறுவனமாக நாம் திகழ்கிறோம். CAKE LABS என எமது பெயர் மாற்றத்துடன், போட்டிகரமான சவால்களுக்கு நாம் அதிகளவு கவனம் செலுத்தவுள்ளோம்” என்றார்.

Full – stack  பொறியியலாளர்களை உருவாக்கும் இலங்கையில் காணப்படும் சில நிறுவனங்களில் ஒன்றாகு CAKE LABS அமைந்துள்ளது. தமது மொழி நடையில் ஆர்வமுள்ள பொறியியலாளர்களாக மட்டும் இருக்காமல், தாம் பணியாற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் பரிபூரண அறிவைக் கொண்டவர்களாக அமைந்துள்ளனர். சிறிய, agile, தன்னிச்சையாக இயங்கும் அணிகளில் பணியாற்றுபவர்களாக அமைந்துள்ளனர். இதன் மூலம் இந்த பொறியியலாளர்களுக்கு உலகில் காணப்படும் அசல் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்குப் பொருத்தமான தொழில் நுட்பத் தீர்வுகளை வடிவமைக்கக்கூடியதாக இருக்கும்.

CAKE LABS (பிரைவட்) லிமிட்டெட், என்பது இலங்கையை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் மற்றும் செயற்பாட்டு ஸ்தாபனமாக அமைந்துள்ளது. இது ஒன்றிணைக்கப்பட்ட உணவக தொழில்நுட்ப கட்டமைப்பான CAKE ஐ வழங்குகிறது. கோர்பரேஷன் என்பது சிலிக்கன் வெலியை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாகும். (Redwood City, CA, USA) இது ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Sysco (NYSE: SYY) வின் அங்கத்துவ நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.