(இராஜதுரை ஹஷான்)
தனியார் பஸ் சேவையாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கம் இவ்வாரத்துக்குள் முன்னெடுக்காவிடின் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ததனியார் பஸ் சேவையில் ஈடுப்படும் ஊழியர்களுக்கு கொவிட் இரண்டாம் சுற்று தாக்கத்தின் போது தடுப்பூசிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தோம்.
இக் கோரிக்கையினை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. புதுவருட கொவிட் கொத்தணி கடந்த காலங்களை காட்டிலும் தீவிரமாக பரவலடைந்துள்ளது.
தனியார் பஸ் ஊழியர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். தனியார் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் ஊழியர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுவோம்.
தற்போதைய சூழலில் தனியார் பஸ் சேவையாளர்கள் பொருளாதார மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை இவ்வாறான நிலையில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போக்குவரத்து சேவையில் ஈடுப்பட தயாரில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM