ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம்

By Vishnu

11 May, 2021 | 10:15 AM
image

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த விருதினை வென்ற வீரர்களின் பெயர் விபரங்களை நேற்யை தினம் சர்வதேச கிரிக்கெட்  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணித் தலைவரும், ஒரு நாள் போட்டியில் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவரது நிலையான மற்றும் சிறப்பான துடுப்பாட்டத்திற்காக ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி வாக்களிக்கும் அகாடமியால் ஏப்ரல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஹீலி நியூசிலாந்திற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், 51.66 சராசரி மற்றும் 98.72 ஸ்ட்ரைக் வீதம் 155 ஓட்டங்கள் பெற்றார். 

நியூசிலாந்திற்கு எதிரான அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றியில் முன்னணி ஓட்ட அடித்த வீரராக அவரது முயற்சிகள் காணப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் மாதாந்தம் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right