ஜேர்மன் டென்னிஸ் நட்சத்திரமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலிய வீரரான மேடியோ பெரெட்டினியை வீழ்த்தி மாட்ரிட் ஓபன் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வந்தது.

களிமண் தரை போட்டியான இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6 Mவது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 10 Mவது இடத்தில் இருந்த இத்தாலியின் மேடியோ பெரேட்டினியை எதிர்கொண்டார்.

2 மணி 40 நிமிடம் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-7 (8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பெரெட்டினியை வீழ்த்தி ஸ்வெரேவ் சம்பியன் ஆனார்.

ஸ்வெரேவ் கால் இறுதியில் 5 முறை சாம்பியனான ரபெல் நடாலையும் (ஸ்பெயின்), அரை இறுதியில் டொமினிக் திம்மையும் (ஆஸ்திரியா) வீழ்த்தியிருந்தார்.

24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மாட்ரிட் ஓபன் பட்டத்தை வெல்வது இது 2 ஆவது முறையாகும். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். அவர் வென்ற 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட 4 ஆவது சர்வதேச பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.