சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக நேற்றைய தினம் மேலும் 548 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தமாக 7,864 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மேல் மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை பின்பற்றாத 4,702 நபர்கள் எச்சரிக்கப்பட்டு மேலும் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.