கொரோனாவின் தீவிர நிலையை சமாளிக்க வடக்கில் முன்னேற்பாடுகள் - வைத்தியர் கேதீஸ்வரன்

Published By: Digital Desk 4

11 May, 2021 | 03:52 AM
image

தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

புதிய வகை கொரோனா வைரஸ் இளையவர்களையே அதிகம் தாக்குகிறது - வைத்தியர்  கேதீஸ்வரன் | Virakesari.lk

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

தற்போது நாடு பூராகவும் ஏற்பட்டு வரும் தீவிர கொரோனா நிலையினை எதிர்கொள்வதற்காக வடக்கு மாகாணத்திலும் சுகாதாரப் பிரிவினரால் பல்வேறுபட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் முதல் கட்டமாக வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருகின்றோம். இந்த நிலையங்களில் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் இங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள்.

 வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற சிகிச்சை நிலையங்களை தவிர மேலதிகமாக கிளிநொச்சியில் பாரதி புரத்திலும் அதைப்போல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியிலும் புதிதாக சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அவை இயங்க ஆரம்பித்துள்ளன.

தற்போது இனங்காணப்படும் நோயாளர்கள் நோய் அறிகுறியுடன் இனங்காணப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது.

 குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நிலைமையைப் பொறுத்து நாங்கள் இந்த கருத்தினை வெளியிடுகின்றோம் அத்துடன் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு சுவாசத் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவையும் அவதானிக்கப்பட்டுள்ளது அந்த வகையிலே வடக்கு மாகாணத்திலும் மாவட்ட ரீதியில் வைத்தியசாலைகளை அதற்கு ஏற்றவாறு தயார்ப் படுத்தியுள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையில் ஒரு விடுதியினை இதற்கு ஏற்றவாறு தயார்படுத்தியுள்ளோம். அதாவது ஆண்களுக்கு ஒரு விடுதி பெண்களுக்கு ஒரு விடுதி என வடக்கு மாகாணத்தில் இந்த ஏற்பாட்டினை ஏற்படுத்தியுள்ளோம்.

 நோய் அறிகுறியுடன் இனங்காணப்படும் தொற்றாளர்களை சிகிச்சை அளிக்க ஒக்சிஜன் தேவை படுவோர் மற்றும் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட வேண்டிய வர்களுக்காகவே இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளோம் அதேபோல தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாய்மாரை பராமரிக்கவென மாவட்டம் தோறும் அதற்கு தனியான ஒரு விடுதியினை சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம். பிரசவ அறையுடன் கூடியதாக அந்த விடுதி தயார்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் அந்த விடுதி விஷேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது அதேபோல ஏனைய மாவட்டங்களிலும் ஒரு விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:34:49
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03