ஏ.என்.ஐ

  

ஜிபூட்டியில் உள்ள சீனாவின் இராணுவத் தளமானது ஆபிரிக்காவில் சீன பாதுகாப்பு ஈடுபாட்டிற்கான அறிகுறி அல்ல, மாறாக ஆபிரிக்காவில் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ.) மூலம் அங்குள்ள நாடுகளில் முதலீடுகளைச் செய்யும் பீஜிங் அக்கண்டத்தில் தனது இராணுவ ஈடுபாட்டை அதிகரிப்பதற்கே முயற்சிக்கிறது.

  

சீனாவின் இந்த முயற்சிக்கான நிதியளிக்கும் திட்டங்களில் அந்தந்த ஆபிரிக்க நாடுகளின் அரசாங்கங்களினுடைய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் மக்கள் தொகை ஆகியவை பங்கு வகிக்கக்கூடும் என்று தி வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

நடாலி ஹெர்பர்ட்  தி வொஷிங்டன் போஸ்ட்டிற்காக எழுதியதொரு கட்டுரையில், சீனா தனது பொருளாதார முதலீடுகளைப் பாதுகாக்கவும், உலக சக்தியாக அதன் நற்பெயரை உருவாக்கவும் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி ஊடாக எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

ஆபிரிக்க பாதுகாப்பு விடயங்களில் சீனா ஆர்வமாக இருப்பதற்கு, அதன் பொருளாதார முதலீடுகளையும் ஆபிரிக்காவில் வாழும் சீன குடிமக்களின் பாதுகாப்பையும்  உறுதி செய்து கொள்வதுமே காரணமாகின்றது என்று பல சீனா- ஆபிரிக்க அறிஞர்கள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  

பாரம்பரியமாக, உள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்ட சீன நிதி சொத்துக்கள் காணப்படுகின்றன. அத்துடன் அங்கு பிற ஆபிரிக்க பிராந்தியங்களை விட சீன மக்கள் குறைவாகவே உள்ளனர். ஆனால் 2019 இன் முதல் ஆறு மாதங்களுக்குள் ஆப்பிரிக்க யூனியன், நைஜீரியா மற்றும் லைபீரியா சீனாவுடன் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி திட்டத்தின்  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

சில ஆய்வாளர்கள், பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின் ஊடான  முதலீட்டு ஒப்பந்தங்களை சீனா அதிகளவில் பாதுகாப்பு ஈடுபாட்டிற்கு வழி வகுக்கின்றது என்றே விளக்குகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக  சீனா-ஆபிரிக்க ஒத்துழைப்புத் திட்டமானது (2019-2022)  பட்டி மற்றும் பாதை முன்முயற்சியானது ‘ஆபிரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அழைப்பு’ என்று நடாலி ஹெர்பர்ட் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், பெய்ஜிங்கின் பாதுகாப்பு உதவியில் மோதல்கள் நிறைந்த நாடுகளுக்கு உதவும் அமைப்புகளுக்கான ஆதரவும் உள்ளடங்குகின்றன.  ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ஈகோவாஸ்) போன்றவற்றுக்கு சீனா ஆதரவளிக்கும் அதேநேரம் மேற்கு ஆபிரிக்காவில் வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஜி-5(சஹேல்) அமைப்புக்கு சீனா பணம் மற்றும் வளங்களை நன்கொடையாக அளித்துள்ளதாகவும் தி வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சீனாவானது, பல ஆபிரிக்க நாடுகளுடன் உளவுத்துறை பகிர்வு, தொழில்நுட்ப இடமாற்றம் மற்றும் கூட்டு இராணுவ மற்றும் பொலிஸ் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளன.

  

2014இல் லைபீரியாவில் ஐ.நா. உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளுடன் பணிபுரிவதானது சில சந்தர்ப்பங்களில், ஆபிரிக்க அரசாங்கங்களுடன் நேரடி ஒருங்கிணைப்பை புறக்கணிப்பதற்கு சீனாவுக்கு உதவியது. அதுமட்டுமன்றி சீன அரசாங்கத்துடன் வலுவான இருதரப்பு அரசியல் அல்லது பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்காத நாடுகள் தன்னை அணுகுவதற்கும் உதவிகளைக் கோருவதற்கும் அது அனுமதி அளித்துள்ளது.

  

அதேநேரத்தில், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளுடனான ஆபிரிக்க நாடுகளின் ஆழமான மற்றும் வரலாற்று உறவுகள் இருந்தபோதிலும், பட்டி மற்றும் பாதை முன்முயற்சித் திட்டமானது சீனாவுடன் ஆபிரிக்க நாடுகள் தமது  இருதரப்பு, உறவுகளை வலுப்படுத்த உதவி வருகின்றது.

  

பட்டி மற்றும் பாதை முன்முயற்சியானது ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறையாக இல்லாவிட்டாலும், பிற நாடுகளில் முதன்மையாக முதலீடு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்கும் கருவியாகும். ஆனால் ஆபிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இது ஆபிரிக்காவில் சீனாவின் ஈடுபாட்டை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இந்த ஈடுபாடானது பாதுகாப்புத் துறைக்கு அப்பாலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஆபிரிக்காவில் சீனாவின் ஈடுபாடானது ஆபிரிக்க கண்டத்தில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வளர்ந்து வருவதை குறிப்பிதாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆபிரிக்காவில் சீனாவின் அதிகரித்த செல்வாக்கு காரணமாக இருப்பது,  அதன் மேற்கத்திய கூட்டாளர்களைக் விடவும் பெய்ஜிங்கில் இருந்த பணம் மற்றும் பாதுகாப்பு உதவியைக் கோரலாம் என்பதனாலேயே ஆகும்.

  

ஆபிரிக்காவில் சீன நகர்வுகளை கருத்தில் கொண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆபிரிக்க வணிகத்திற்கும் வளர்ச்சிக்கும் பிற முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் முகமாக ‘ஆப்பிரிக்காவை வளமாக்குங்கள்" திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு ஐரோப்பிய வர்த்தகத்தையும் ஆபிரிக்காவுடனான முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கில் ஒரு முயற்சியைத் தொடங்கியது. இது பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஐரோப்பாவிற்கு செல்லும் ஆப்பிரிக்க குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முயல்கிறது.

நாடுகள் தங்களது வெளியுறவுக் கொள்கையை இந்த திட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் போது  ஆபிரிக்காவில் நாடுகளுடன் சீனாவின் இராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை விரிவடைய வாய்ப்புள்ளது, இது அமெரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகளின் நீண்டகால பாதுகாப்பு பங்காளிகளுக்கு புதிய சவால்களையும் கேள்விகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது. பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின் அனுசரணையின் கீழ், கைச்சாத்திடப்பட்ட ஆபிரிக்க நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள், சீனாவின் முக்கியமான விடயங்களுக்கான அணுகலை வழங்குகின்றன, குறிப்பாக, அங்கு விரிவாக்கப்பட்ட இராணுவ இருப்பை நியாயப்படுத்த முடியும் என்று  ‘ஹெர்பர்ட்’ கருத்து வெளியியிட்டுள்ளார்.

  

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உலகெங்கிலும் 140 நாடுகள் 200 க்கும் மேற்பட்ட பட்டி மற்றும் பாதை முன்முயற்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முக்கியமாக சீன நிறுவனங்களுக்கு துறைமுகங்கள், ரயில்வே, மின் நிலையங்கள் மற்றும் தொலைதொடர்பு வலையமைப்புக்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் ஹோஸ்ட் நாடுகளுக்கு குறைந்த வட்டி சீன கடன்களைப் பயன்படுத்தி, தம்பக்கம் இருக்கின்றன என்று  வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.