இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி, இன்று திங்கட்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பிறகு, வீடு திரும்பிய விராட் கோலி கொரோனா வைரஸ் எதிரான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளார். 

தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி கொரோனா நிவாரண நிதி திரட்டினார்.  முதற்கட்டமாக இந்திய மதிப்பில் ரூபாய் 2 கோடியை அவர்கள் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி வசூல் ஆகி உள்ளதாக விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில்   அண்மையில்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.