கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலையில் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (10) விடுவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அன்புவழிபுரம்,  காந்தி நகர்,  உவர்மலை,  மட்கோ, லிங்கநகர்,  காவட்டிகுடா- சமன்புர, மற்றும் தானயகம ஆகிய கிராமசேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருகோணமலையில் பாலையூற்று பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.