மைக்ரோ-பிளாக்கிங் தளமான டுவிட்டர் சமீபத்தில் ஐ.எஸ்.ஓ மற்றும் அன்ரொய்ட்டில்  பெரிய புகைப்படங்கள், முன்னோட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Mashable இன் படி, பெரிய பட முன்னோட்டங்கள் அவற்றின் வரம்புகளைக் கொண்டுள்ளன. டுவிட்டரைப் பொறுத்தவரை, 2:1 மற்றும் 3:4 விகிதங்களைக் கொண்ட படங்கள் இப்போது முழுமையாகக் காண்பிக்கப்படும்.

ஒருவர் நம்பமுடியாத பெரிய புகைப்படத்தை பதிவிட்டால், அது இன்னும் செதுக்கப்படும்.

டுட்டர் நிறுவனம் குறித்த அம்சத்தை மார்ச் மாதத்தில் சோதனை செய்ய ஆரம்பித்தது. இருப்பினும், தற்போது இது அனைவரின் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது.

இந்த அம்சம் மொபைல் போன்களில் மட்டுமே செயல்படும் என Mashable தெரிவித்துள்ளது.

ஆனால், மைக்ரோ பிளாக்கிங் தளம் இந்த அம்சத்தை விரைவில் வலைத்தளத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.