கடல் வளங்களை நிலைபேறான முறையில் பயன்படுத்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட், டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. 

இதன் மூலம் கடல்சார் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் தீர்மானமெடுத்தல்களில் முக்கிய பங்களிப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சமூகங்கள் மத்தியில் கல்விசார் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வை கட்டியெழுப்புதல் மற்றும் சிறந்த பங்காண்மைகளை ஊக்குவித்தல் போன்றன முன்னெடுக்கப்படவுள்ளன. மூன்றுவருட காலப்பகுதிக்கு பல மில்லியன் ரூபா முதலீட்டில் டோக்கியோ சீமெந்து முன்னெடுத்து வரும் பவளப்பாறைகளை மீளவளர்க்கும் செயற்பாடுகளுக்கு ப்ளு ரிசோர்சஸ் ஆய்வு நிபுணத்துவம் பங்களிப்புகளை வழங்கும்.

இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதியில் டோக்கியோ சீமெந்து முன்னெடுத்து வரும் கடல் பவளப்பாறைகள் புனருத்தாரண செயற்பாடுகளுக்கு இந்த பங்காண்மையின் ஊடாக பிரதான பங்களிப்புகள் வழங்கப்படவுள்ளன. கடந்த சில வருடங்களில், டோக்கியோ சீமெந்து நிறுவனம், நாடு முழுவதிலும் காணப்படும் இயற்கை பவளப்பாறைகளை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. 

இந்த செயற்பாடுகளுக்கான வளங்களை வழங்குவதில் நிறுவனம் முன்னோடியாக திகழ்வதுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயற்பாடுகளுக்கு துறைசார்ந்த அமைப்புகளின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதில் முன்னணியில் திகழ்கிறது. 

இதற்கமைய, இதுவரையில் டோக்கியோ சீமெந்து நிறுவனம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு நிதியம், கடற்படை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வெவ்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட் இணை ஸ்தாபகர் டானியல் பெர்னான்டோ இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,

“டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதன் மூலம், இலங்கையின் பவளப் பாறைகளை பாதுகாப்பது தொடர்பில் ஆய்வு மற்றும் காப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அபிவிருத்தித்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் போது, இலகுவில் அழியக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்த சூழல்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. ஆனாலும்ரூபவ் பவளப்பாறைகள் எமது சூழல் சமநிலையில் முக்கிய பங்கை வகிப்பதுடன், கரையோர மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த பங்காண்மையின் மூலமாக, துறையுடன் விஞ்ஞான ரீதியான பாதுகாப்பை ஒன்றிணைப்பதுடன், பவளப்பாறைகளை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்” என்றார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடலின் மூலமாகரூபவ் டோக்கியோ சீமெந்தின் பவளப்பாறைகள் மீளமைப்பு செயற்திட்டம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படும். சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கடல்கீழ் ஆய்வு முறைகளை மற்றும் பவளப்பாறைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் நுட்ப முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ப்ளு ரிசோர்சஸ் தமது நிபுணத்துவத்தை வழங்கவுள்ளது.

மீள் சுழற்சிக்குட்படுத்தப்பட்ட ரெடி மிக்ஸ் கொங்கிறீற் கலவையை கொண்டு பவள பந்துகள் எனும் செயற்கை கட்டமைப்புகள் உருவாகுவதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் புதிய பவளப்பாறைகள் பதிந்து உருவாகின்றன. WRCT, வனஜீவராசிகள் திணைக்களம், ப்ளு ரிசோர்சஸ் மற்றும் கடற்படை ஆகியவற்றுடன் இணைந்து இந்த பவள பந்துகள் பாசிக்குடா, காயென்கேணி, டச்சு குடா, புறா தீவு முதல் யாழ்ப்பாணம் வரை கரையோரங்களில் பதிக்கப்பட்டுள்ளன. அறிவு பகிர்வு, திட்டமிடல் மற்றும் ஒன்றிணைந்த களச் செயற்பாடுகள் போன்றன, பவளப்பாறைகள் மீளமைப்பு திட்டத்துக்கு உதவியாக அமையும் என்பதுடன், சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கு அவசியமான தரமான உள்ளார்ந்த அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த திட்டத்தின் நிலைபேறான செயற்பாட்டை உறுதி செய்யும் வகையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக அனுகூலம் பெறுவோரை இதில் இணைத்துக் கொள்வதில் டோக்கியோ சீமெந்து அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதில் மீனவ குடும்பங்கள், சுற்றுலாத்துறை மற்றும் கடற்படை ஆகியன அடங்கியுள்ளன. இவர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு என்பதன் மூலம், பாரதூரமான செயற்பாடுகளை தடுப்பதற்கு உதவுவது மட்டுமின்றிரூபவ் பொருமளவு சமூகம் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியாக அமையும்.

நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்படும் அதிகளவு வினைத்திறன் வாய்ந்த செயற்திட்டங்களில் ஒன்றாக இந்த பவளப்பாறைகள் புனருத்தாரணம் செய்யும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த பாதுகாப்புரூபவ் பரப்புகை, விஞ்ஞானபூர்வ ஆய்வு, தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் கல்வி ஆகிய செயற்பாடுகளை 2014 ஆம் ஆண்டு இலங்கை வர்த்தக சம்மேளனம் சிறந்த சூழல்சார்ந்த சமூக பொறுப்புணர்வு வாய்ந்த செயற்பாடாக கௌரவித்திருந்தது.

வெப்ப மண்டல காடு வளர்ப்பு செயற்திட்டத்தை முன்னெடுப்பதிலும் டோக்கியோ சீமெந்து குழுமம் பங்களிப்பு வழங்கி வருகிறது. 

இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் வெப்ப மண்டல தாவர கன்றுகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது. இது போன்ற செயற்பாடுகள் மூலமாக நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.