சத்ரியன்

“2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு, நெடுக்கால நோக்கில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியிருக்கிறது”

 “சரத் பொன்சேகா நிறுவ முனைவது போன்று  தமிழ் மக்கள் அவரையும், அவர் நடத்திய போரையும்  அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. யாரைப் பிரதானமாக தோற்கடிக்க வேண்டும் என்று மட்டுமே தமிழ் மக்கள் கணக்குப் போட்டனர்”

பாராளுமன்றத்தில் கடந்தவாரம் அமைச்சர் சரத் வீரசேகரவுடன், நடந்த வாக்குவாதத்தின் போது, தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக் கொண்டுள்ளதாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, குறிப்பிட்டிருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

“தமிழ் மக்கள் இராணுவத்தை வெறுக்கவில்லை என்றும், மனிதாபிமானமான முறையில், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போர் புரிந்ததால், அவர்கள் இலங்கை இராணுவத்தை ஏற்றுக் கொண்டனர்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இராணுவத் தளபதியான தனக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தமை அவர்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் என்பதை காட்டுகிறது என்றும் கூறியிருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில், சரத் பொன்சேகா அண்மையில் தமிழர்களுக்குச் சாதகமான சில கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்.

போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறிய அவர் அவ்வாறான விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார் என்றும் கூறியிருந்தார். ஆனால் சரத் பொன்சேகா ஒன்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவோ, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகவோ அவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கவில்லை.

தனது அரசியல் எதிரிகளை முடக்குவதற்கும், இராணுவத்தினரை குற்றச்சாட்டகளில் இருந்து பாதுகாப்பதற்காகவுமே அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-09#page-17

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.