ஜப்பானில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தொடர்ந்து கவனமாக விவாதிக்கப்பட வேண்டும் என்று டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்த விளையாட்டுக்களை மக்களை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஒசாகா கூறினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஏற்கனவே ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில் இந்த ஆண்டு விளையாட்டுகளை நடத்துவது குறித்து ஜப்பானில் எதிர்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது. 

வைரஸும் அதன் பரவும் வகைகளும் ஜப்பானின் சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள. மக்கள் தொகையில் 2% மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

ஆனால் உள்ளூர் அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஜூலை 23 அன்று திட்டமிட்டபடி விளையாட்டுக்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.