ஆப்கானிஸ்தானின் தெற்கு ஜாபுல் மாகாணத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது என்று ஜாபுல் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குல் இஸ்லாம் சியால் தெரிவித்தார்.

சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 25 பேர் காயமடைந்துள்ளனர்.

செப்டம்பர் 11 க்குள் படையினரை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்த பின்னர் சமீபத்திய வாரங்களில் ஆப்கானில் வன்முறை கடுமையாக அதிகரித்து வருகிறது. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதுடன், 165 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.