கல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தோல்வி

By Digital Desk 2

10 May, 2021 | 12:24 PM
image

எம்.எஸ்.தீன் 

கல்முனை உப பிரதேச செயலகம் பற்றிய கருத்துக்கள் சூடு பிடித்துள்ளன. கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கையினை முன் வைத்துக் கொண்டு வருகின்றார்கள். தமிழர்களின் இக்கோரிக்கைக்கு  எதிராக முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தடையாக இருந்து வருவதாகத் தமிழர் தரப்பினர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

  

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உப தமிழ் பிரதேச செயலகம் ஒன்று நிர்வாக இலகு கருதி 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழர் தரப்பினர் இதனை தரம் உயர்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன ரீதியாக பிரதேச செயலகங்களை பிரிக்க முடியாதென்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  

இதனை அடுத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று அரசாங்கத்திடம் தமிழ் அரசியல்வாதிகள் கோரிக்கைகளை வைத்தார்கள். ஆயினும், கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் ஒரு உபபிரதேச செயலகமாகவே செயற்படுவதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. நிதி போன்ற முக்கிய அதிகாரங்கள் கல்முனை பிரதேச செயலகத்திடமே இருந்தது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக உபபிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலமாக உபபிரதேச செயலாகமாக செயற்பட்டதனை விடவும் சற்று கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதாக இது விளங்கியது.

இத்தகையதொரு நிலையில் தற்போது இதன் தரம் குறைக்கப்பட்டுள்ளது. தனியான கணக்காளர் ஒருவர் செயற்பட முடியாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் இதற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியனும், ஹரீஸும் மிகவும் சூடான கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right