அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில்  பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு   உள்ளூர் நேரப்படி அதிகாலை 12:18 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலாக்காகிய பலத்த காயமடைந்த ஒரு வாலிபர் உட்பட 7 பேரை மீட்டடுள்ளனர்.

குறித்த வாலிபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் காதலன் இந்த  தாக்குதலை நடத்தியதுடன், தானும் தற்கொலை செயதிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மரண விசாரணைகளின் பின் உயிரிழந்தவர்களின் மற்றும் சந்தேக நபரின் பெயர்கள் வெளியிடப்படும் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.