குவைத்தில் எத்தியோப்பியன் பெண்ணால் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சடலம் கட்டார் ஏயர்வேஸ் விமான மூலமாக நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் மஹாவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்றும் அவர் 2019 ஆம் ஆண்டு குவைத்துக்கு பணிப் பெண்ணாக சென்றவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அவர் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி எத்தியோப்பிய பெண்ணால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிவான் விசாரணைகள் நேற்றைய தினம் நடத்தப்பட்டன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.