நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் மாத்திரம் இதுவரை மொத்தமாக 2,659 கொரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில், இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 125,893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்றையதினம் 1,365 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த நிலையில், நாட்டில் மொத்தமாக 104,463 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.