கொரோனா அச்சுறுத்தலையடுத்து அரசாங்கம் அரச நிறுவனங்களில் மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களில் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைக்கப்படக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளையதினம் வெளியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.