மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோ்ந்த ஆண் ஒருவர் வாழைச்சேனை பிரதேச காட்டுப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார். பின்னர் குறித்த நபர் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று (09) வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப் பகுதியில் சடலம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றவர்களால் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கடந்த 27 ஆம் திகதி காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள நிலையில், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM