கல்முனை  சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 100 மில்லிக்கிராம்  ஹெரோயின்,  590 போதை பொருள் குளிசைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

கல்முனை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விகேட புரனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று மாலை சாய்ந்தமருது பகுதியில் வீதியில் வைத்து போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த போதைவஸ்து வியாபாரியை  சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தபோது,  அவரின் உடமையில் இருந்து 100 மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை குளுசைகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்பமுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.