பதுளை பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஊழியராக இருந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மடுல்சீமைப் பொலிசாரினால் இன்று 09-05-2021 கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய மாணவியொருவரை, பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே, மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து குறித்த இளைஞனை நாளை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்றிருந்த, குறித்த மாணவி பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட போது, அவர் நான்கு மாத கர்ப்பிணியென்று தெரியவந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மாணவி வழங்கிய தகவலின் பேரில், பொலிசார் அந்த இளைஞன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.