சி.அ.யோதிலிங்கம்

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியமைத்த நிலையில் ஈழத்தமிழரின் நலன் நின்று அரசியல் பொருளாதார கலாசார ரீதியாக சில நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த வேண்டும். இந்த வலியுறுத்தலை தாயக மக்களும், தமிழக மக்களும், புலம்பெயர் தமிழர்களும் கூட்டாக விடுக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி தாயக தமிழ் மக்கள் சார்பில் மேலும் சில நடவடிக்கைகயை ‘தளபதி’ தலைமையில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது மேலெழுந்துள்ளன. இதில் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், சமயத்தலைவர்களினது பங்களிப்பு இன்றி அமையாதது.

அரசியல் பணிகள்

அந்த வகையில் முதலாவது கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான ‘டெசோ’ அமைப்பை மீண்டும் புனரமைத்து முன்கொண்டுச் செல்வதாகும். இந்த அமைப்பு ஈழத் தமிழர் விவகாரத்தை இந்திய மயப்படுத்த உதவிகரமாக அமையும்.

  

தற்போது இந்தியாவில் அதிகாரத்தில் உள்ள மாநிலக்கட்சிகள் பல அந்தந்த மாநிலங்களில் மிகுந்த செல்வாக்குள்ள கட்சிகளாக விளங்குகின்றன. அவை இச்செயற்பாட்டில் அதிக பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே கருணாநிதி டெசோ அமைப்பை உருவாக்கிய போது பல மாநிலத் தலைவர்கள் அந்த அமைப்பின் மாநாட்டில் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் அப்போது ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ராமராவும் ஒருவராவர். இந்தியாவின் பிரதமராக பதவிவகித்த வாஜ்பாயும் பங்குபற்றியிருந்தார்.

  

ஆனால் துரதிஷ்டவசமாக விடுதலை இயக்கங்களிடையே ஏற்பட்ட மோதல்களினால் அப்பணி முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. தற்போதைய சூழலில் அப்பணி மிகவும் அவசியமாகவுள்ளது. இதில், தயாகத்தமிழர்கள் மற்றும் இந்திய நலன்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.