ஹரிகரன்

“சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் நெருக்கத்துக்கு உள்ளாக்குவதற்கான முயற்சியாகும். இவ்வாறான நெருங்கிய ஒத்துழைப்பு தான், தற்போதைய சூழலில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது”

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் 37 உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவுடன், இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக பலரும் சந்தேகம் கிளப்பியிருந்தார்கள்.

இந்தப் பயணத்தின் உண்மையான நோக்கம் என்ன- இந்தப் பயணத்தின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கின்ற உடன்பாடுகள் என்ன என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன.

குறிப்பாக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுப்பிய கேள்வி ஆச்சரியமானது.

ஏனென்றால், அவர் இராணுவத் தளபதியாக பதவியில் இருந்த காலத்தில் இதுபோன்ற பயணங்கள் பலவற்றைச் சந்தித்திருந்தவர். அவர் அங்கம் வகித்த அரசாங்கத்தின் காலத்திலும், இவ்வாறான பயணங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனாலும் ஜெனரல் வெங் பெங்கின் பயணம் குறித்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருவதன் நோக்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளின் தளபதிகள் கூட அடிக்கடி இலங்கைக்கு வருவதில்லை. எப்போதாவது இரண்டாம் மூன்றாம் மட்ட தளபதிகள் தான் வருகிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.