கார்வண்ணன்

செழிப்பான - பாதுகாப்பான நாட்டை உருவாக்கப் போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களுக்கு முகம் கொடுக்கும் நாட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த பொருளாதார செழிப்பு தொடர்பான, வாக்குறுதிகள் எதுவும் இப்போது நம்பிக்கை ஊட்டுவனவாக இருக்கவில்லை.

இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், நாட்டின் பொருளாதாரம், முன்னொருபோதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்துக்குப் பின்னர், மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த ஆண்டாக 2020 அமைந்திருந்தது. இந்த வீழ்ச்சிக்கு மூன்று காரணிகளைக் குறிப்பிடலாம்.

முதலாவது, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் பதவியில் இருந்த அரசாங்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்களில் காணப்பட்ட தவறுகள். முன்னைய அரசின் பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சி. இது குறிப்பிட்டளவான தாக்கத்தை செலுத்தக் கூடியதே.

இரண்டாவது, தற்போதைய கொரோனா தொற்றுப் பரவல். இது கணிசமான பாதிப்பை இலங்கைக்கு மட்டுமன்றி உலக பொருளாதாரத்துக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அதனையும் தாண்டி, சீனா, இந்தியா போன்ற பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியை காட்டியிருக்கின்றன. ஆகவே திறமையான பொருளாதார கொள்கை, திட்டங்களை உள்ள நாடுகளுக்கு இது ஒரு பொதுவான பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள முடியாது. வளர்ச்சி இல்லாவிட்டாலும், வீழ்ச்சியில் இருந்து தடுத்திருக்கலாம்.

மூன்றாவது, தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மை. செழிப்பான இலங்கை என்ற கவர்ச்சியான கோசத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அந்த பொருளாதார கனவை நிறைவேற்றவதற்கு சரியான திட்டங்களை செயற்படுத்த தவறியமை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.