நசுக்கப்படும் ஊடக சுதந்திரம்

Published By: Digital Desk 2

09 May, 2021 | 07:16 PM
image

கபில்

“ஜனாதிபதியும் பிரதமரும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலையே இன்றுள்ளது”

 “ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பின்மை மாத்திரமன்றி, அவர்களின் மீதான உரிமைகள் மீறப்படுகின்ற போது, நீதி நிலை நாட்டப்படுவதில்லை என்ற அவலம் தொடருகின்றது”

கடந்த வாரம் சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்திருந்த செய்தியில், உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல, உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து, போலிச் செய்திகளின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற வெறுப்பை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை.

அரசாங்கத்துக்கு ஊடகங்கள் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அது தாங்கியிருந்தது. அத்துடன் “நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி, நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்” என்றும் ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, அரசாங்கத்தின் நிறைகளை ஊடகங்கள் குறிப்பிடாமல், குறைகளை மட்டுமே பேசுகின்றன என்ற குற்றச்சாட்டையும், மக்களை நல்வழிப்படுத்த அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியின் செய்தி உள்ளடக்கியிருந்தது.

ஊடக சுதந்திரத்தை தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்திருந்தாலும், இலங்கையில் ஊடக சுதந்திரம் படிப்படியாக கேள்விக்குள்ளாகி வருகிறது என்பதே உண்மை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07