சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கை பிரஜையாக இருக்கும் எவரும் 18 வயதை பூர்த்தி செய்தவுடன் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் விதத்தில் சட்டமூலமொன்று ஏற்கனவே பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அதிகளவானோர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுக்கொள்ள போகின்றனர். இவர்கள் அனைவருமே இளைஞர் யுவதிகளாக இருக்கப்போகின்றனர்.

எது எப்படியானாலும் 18 வயதை பூர்த்தி செய்யும் எவரும் இந்த நாட்டின் அரசியலை புரிந்து தாம் வாக்களிக்க அல்லது தெரிவு செய்யப்போகும் நபர் எப்படியானவர் என்ற புரிதலையும் பக்குவத்தையும் பெற்றிருப்பார்களா என்ற கேள்வி மறுபுறம் எழுந்துள்ளது.

அரசியலமைப்பின் படி இலங்கை நாட்டின் பிரஜை ஒருவர் 19 வயதை எட்டியிருந்தால் அவர் வாக்களிக்கும் தகுதியை பெற்றவராவார்.  பிரதமரின் இந்த யோசனையானது 1980 ஆம் ஆண்டின் 44 ஆவது இலக்க வாக்காளர் பதிவு சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தப் போகின்றது. அதன்படி,   பெப்ரவரி 1 தொடக்கம்  மே 31 மற்றும் ஜுன் 1 தொடக்கம் செப்டெம்பர் 30 மற்றும்  ஒக்டோபர் 1 தொடக்கம் ஜனவரி 31 ஆகிய மாதங்களில் 18 வயதை பூர்த்தி செய்த எவரும் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை காட்டி , தத்தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம்.  ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஒரு தடவையே வாக்காளர்களாக பதிவு செய்யும் முறை இருந்தது. தற்போது அது ஆண்டுக்கு மூன்று தடவையாக மாற்றப்பட்டுள்ளது.

  

அவ்வாறு பதிவு செய்யப்படுவோர் பற்றிய பொது ஆய்வை  இரண்டு வாரங்களுக்குள் உறுதிப்படுத்தி  பின்னர்  மூன்று மொழிகளிலும் வர்த்தமானிப்படுத்த பட்டியல் படுத்துவதற்கு குறித்த பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரி முன்வர வேண்டும் என்பது முக்கிய விடயம். இது தொடர்பான ஆட்சேபனைகளையும் பதிவு செய்யும் அதிகாரிக்கு பத்து நாட்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கலாம் என்றும் கூறுகின்றது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-09#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.