புதிய வகை வைரஸ் நாட்டில் பரவத்தொடங்கினால் அதன் தாக்கத்தை சுகாதாரப் பிரிவினரால் எதிர்கொள்ள முடியாது- வைத்தியநிபுணர் சஞ்சய பெரேரா

Published By: Digital Desk 2

09 May, 2021 | 07:08 PM
image

நா.தனுஜா

இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் திரிபடைந்த புதிய கொவிட் - 19 வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. அந்த புதிய வகை வைரஸ் எமது நாட்டில் பரவ தொடங்கினால், அதன் தாக்கத்தை சுகாதார பிரிவினரால் எதிர்கொள்ள முடியாது போகும் என்று மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம் தொடர்பான பேராசிரியர் வைத்திய நிபுணர் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

இரு தினங்களுக்கு முன்னர் திரிபடைந்த புதியவகை கொவிட் - 19 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வைரஸ் தற்போது இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பரவி வருவது இனங்காணப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பரவிவரும் வைரஸை விடவும் அந்த வகை வைரஸின் வீரியம் 15 சதவீதம் உயர்வானதாகும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளமைக்கு இந்த புதியவகை வைரஸின் தாக்கம் மிகமுக்கியமான காரணம் என்று தொற்றுநோய் சம்பந்தமான விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றிய இந்தோனேசியா போன்ற நாட்டிலேயே குறித்த புதியவகை வைரஸ் பரவியுள்ளதெனின், இலங்கையின் நிலை தொடர்பில் உரிய அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் அந்த புதியவகை வைரஸ் இலங்கையில் பரவத்தொடங்கினால், அதன் தாக்கத்தை நாட்டின் சுகாதாரப்பிரிவால் எதிர்கொள்ள முடியாமல் போகும்.

இதுபோன்ற விடயங்களில் அரசாங்கத்தினால் மாத்திரம் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் சமளவான பொறுப்பு பொதுமக்கள் வசமுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கவேண்டும் என்று கூறமாட்டேன். நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொள்ளும் போது முழுநாட்டையும் முடக்குவது சாத்தியமல்ல. விமான நிலையங்களையும் முழுமையான மூடவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் முறையான புதிய செயற்திட்டம் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25