ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முடிவடைந்ததன் பின் மாயமான சிறுவன் மற்றும் அவரது சகோதரியும் இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையத்திற்கு நேற்று புலமைப் பரீட்சைக்கு சென்ற இவர்கள் பின்னர் வீடு திரும்பாத நிலையில், அவர்களது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும்,குறித்த சிறுவர்களின் தாய், தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதால், இவர்கள் இருவரும் தாயை காணச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த சிறுவர்கள் இருவரும் கம்பளையில் தாய் தங்கிருந்த வீட்டில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.