உலக செஞ்சிலுவை தினமான இன்று (08.05.2021)  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் 2 மாணவர்களுக்கு புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி பெண் தலைமைத்துவத்தை கொண்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு முதல் கட்டமாக புலமைப்பரிவில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக மாதம் ஒன்றிற்கு 2,500 ரூபாய் பணம் குறித்த மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு வழங்கி வைக்கப்பட உள்ளது.

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் குறித்த நிகழ்வு ஒரே நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சுகாதார நடை முறைகளை கருத்தில் கொண்டு இடம் பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரி பிரீன்ஸ் டயஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வை தொடர்ந்து மர நடுகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.