நாட்டில் இன்று (08.05.2021) மேலும் 1,335  கொரோனா தொற்றாளர்கள்  குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,098 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை,  1,21,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 17,476 பேர்

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 126 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 764 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.