குளிர் பாலில் போதைப்பொருளை கலந்து கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது...!

Published By: Digital Desk 3

08 May, 2021 | 05:53 PM
image

குளிர் பாலில் கொக்கைன் போதைப்பொருள் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த புத்தூர் வாசி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

மானிப்பாயில் சில நாள்களுக்கு முன்பு சலவைத் தொழிலகம் ஒன்றில் உரிமையாளருக்கு குளிர் பால் பக்கற் வழங்கி அவரை மயக்கி 2 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

அதேவேளை, மானிப்பாயில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை வாடகைக்கு அமர்த்தி  சாவகச்சேரி பகுதிக்கு அழைத்து சென்று குளிர் பால்  பக்கற்றை வழங்கியுள்ளார்.

பக்கெற்றின் வாய் பகுதியை வெட்டி வழங்கியதால் முச்சக்கர வண்டிச் சாரதி அதனை ஏற்க மறுத்த போது, ஸ்ரோ இல்லாததால் அவ்வாறு செய்யதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் சாரதி அதனைப் வாங்கிபருகிய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

அதன்போது முச்சக்கர வண்டி சாரதி அணிந்திருந்த மோதிரம் உள்பட 2 தங்கப் பவுண் நகையை கொள்ளையிட்டு அந்த நபர் தப்பித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் கைதடியைச் சேர்ந்தவர்களால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலும் வைத்தியசாலை பொலிஸார் ஊடாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த இரு கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவினால் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் வழங்கப்பட்டது.

சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களில் சிசிரிவி பதிவைப் பெற்ற யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று  வெள்ளிக்கிழமை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினர்.

சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் தான் கொக்கைன் போதைப்பொருளை குளிர் பாலில் கலந்து வழங்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41
news-image

எல்பிட்டியில் தாயும் மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்...

2023-12-11 13:47:47
news-image

மசாஜ் நிலையம் எனக் கூறி விபசார...

2023-12-11 13:47:20