(செ.தேன்மொழி)
பத்தரமுல்ல பகுதியில் 44 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தரமுல்ல பகுதியில் நேற்று பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது 4 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் படி பாதுக்க - கலகெதர பகுதியில் இரு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கிராம் மற்றும் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஏழு நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் பொலிஸார்  தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.