இந்தியாவில் பரவிவரும் பி.1.617 (B.1.617) ரக வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இதேவேளை, பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட பி.1.1.7  (B.1.1.7) என்ற திரிபடைந்த கொவிட் வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இந்நிலையில், நைஜீரியாவில்  பரவி வரும் பி.1.525 (B.1.525) வைரஸானது பண்டாரகம மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் கொவிட் தொற்றுக்குள்ளான நபரொருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தென்னாபிரிக்காவில் வியாபித்து வரும் பி.1..351 (B.1.351) என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.