இந்தியா, தமிழகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  கொரோனா  பெருந்தொற்றின் 2 ஆவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு  அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில்  எதிர் வரும் 10ஆம் திகதி முதல் இரு வாரங்களுக்கு  முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால் நாளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், இதன்படி, இரவு  9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது/. இதேவேளை இன்றும்  நாளையும்  தமிழகம் முழுவதும் 24 மணிநேர பஸ் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.